14 January 2012

பழைய பகைகளை மறந்து

உறவுகள் எல்லாம் கூடி
பாகுபாடுகள் இன்றி 
கொண்டாடிய அந்த பொங்கல் நாள் 
இன்னும் என் கண்ணில் நிற்க.. 

இன்றோ 
பாகுபாடுகளை தவிர 
வேறு எதுவுமின்றி 
அவரவர் கொண்டாடும் 
பொங்கல் நாளில் 
கரும்பின் சுவை இனிபென்றாலும் 
என்னவோ 
எனக்கு மட்டும் 
கசப்பாய் இருக்கிறது...
 
தனி தனியாய் இருப்பதில் 
கொண்டாட்டம் என்றால் 
உறவுகள் என்ற வார்த்தை 
உருவானதுக்கு அர்த்தம் 
தேடியவாறு நான்....

ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த வரிகள் தான் நாபகம் வருகிறது " Whatever happens life has to go on...." 
உறவுகள் உலகத்தை விட்டு பிரிந்தால் மறந்துவிடலாம் 
உறவுகள் உறவை விட்டு பிரிந்தால்?

பழைய பொருட்களை மட்டும் அல்ல 
பழைய பகைகளை மறந்து 
அனைவரும் இன்பமுடன் வாழ 
நான் இறைவனை 
வேண்டபோவது இல்லை ...
உங்களிடம் வேண்டி கொள்கின்றேன்.

-------சா. சக்திவேல் 

No comments:

Post a Comment